ஆந்திர பிரதேசத்தில் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற 35 வயது நபர் மரணம்
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராயதுர்கம் பகுதியில் உள்ள திரையரங்கில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹரிஜன மதன்னப்பா இறந்து கிடந்ததை தியேட்டர் துப்புரவு பணியாளர்கள் கண்டுபிடித்தனர் என்று கல்யாணதுர்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ரவிபாபு தெரிவித்தார்.
“அவர் எப்போது இறந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மேட்டினி நிகழ்ச்சிக்குப் பிறகு துப்புரவு ஊழியர்கள் அவர் இறந்துவிட்டார் என கண்டுபிடித்துள்ளனர்” என்று ரவிபாபு குறிப்பிட்டுள்ளார்.
மதன்னப்பா மது போதையில் மேட்டினி ஷோவுக்காக தியேட்டருக்குள் நுழைந்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
“அவர் நான்கு குழந்தைகளின் தந்தை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் பிரிவு 194ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.