நாமல், திலித் உட்பட 35 பேர் கட்டுப்பணம் இழப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் உரிய வாக்கு வீதத்தை பெறாமையால் 35 பேர் தமது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் ரத்னாயக கூறுகிறார்.
இவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபாவையும் சுயேட்சை வேட்பாளராகள் 75 ஆயிரம் ரூபாய்களையும் கட்டுப் பணமாக செலுத்தினர்.
எனினும் இவர்களில் பிரதான வேட்பாளருக்கான ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாச அனுர குமார திசாநாயக்க ஆகியோர் மட்டுமே கட்டுப்பணத்தை பெறுவதற்கு அவசியமான வாக்குகளை பெற்றவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 23 times, 1 visits today)