UKவில் தங்கியுள்ள ஹொங்கொங் மக்களின் நிரந்தர விசா தொடர்பில் எழுந்துள்ள கவலை!
பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்களால், BNO விசாவில் இங்கிலாந்திற்கு வருகை தந்த ஹொங்கொங் மக்கள் தொடர்பில் 34 எம்.பிகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதிய மாற்றங்கள் புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்தில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும், படிக்கவும், பின்னர் பிரித்தானிய குடியுரிமையைப் பெறவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் அரசாங்கம் பிரத்தானிய தேசிய வெளிநாட்டு (BNO) விசாக்களை சுமார் 200000 ஹொங்கொங் மக்களுக்கு வழங்கியது.
1997 ஆம் ஆண்டு சீனாவின் பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து தப்பித்து வந்த சில ஹொங்கொங் மக்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் BNO விசாக்களை வழங்கியது.
தற்போதைய புதிய சட்டங்கள் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என 34 அமைச்சர்கள் கவலைக்கொண்டுள்ளனர்.
ஆகவே அவர்களின் பாதுகாப்பு மற்றும் விசா தொடர்பான தேவைகள் பூர்த்தி செய்வதை உறுதி செய்யுமாறு 34 எம்.பிகளும் இடம்பெயர்வு அமைச்சர் மைக் டாப்பிற்கு (Mike Tapp) கடிதம் எழுதியுள்ளனர்.
BNO விசாவில் பிரித்தானியாவிற்கு வந்த முதல் ஹொங்கொங் மக்கள் மார்ச் 2026 முதல் பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவார்கள்.
ஆனால் புதிய திட்டங்களின் கீழ் அவர்களின் இந்த சலுகை பூர்த்தி செய்யப்படாமல் போகலாம் என்றும் குறித்த அமைச்சர்கள் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் குறைந்தபட்ச சம்பளத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிடுவார்கள், இதனால் அவர்களுக்கு IRL மறுக்கப்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தன்னார்வத் தொண்டு, அக்கறை கொண்ட பொறுப்புகள் அல்லது ஒரு முக்கிய பணியாளராக இருப்பது போன்ற பிற பங்களிப்புகளை உள்துறை அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதாக தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும் என்றும் மேற்படி 34 அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்.





