அமெரிக்காவில் சாலை விபத்தில் 32 வயது இந்தியர் மீது கொலைக் குற்றச்சாட்டு
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குள்(America) சட்டவிரோதமாக நுழைந்த ஒரு இந்தியர் ஓட்டி வந்த லாரி கார் மீது மோதியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
32 வயதான ராஜீந்தர் குமார்(Rajinder Kumar) மீது அலட்சியமாக கொலை செய்தல் மற்றும் கவனக்குறைவாக ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 25 வயது வில்லியம் மைக்கா கார்ட்டர்(William Micah Carter) மற்றும் 24 வயது ஜெனிஃபர் லின் லோவர்(Jennifer Lynn Lower) ஆகியோர் உயிரிழந்தனர்.
கார்ட்டர் மற்றும் லோவர்இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அதே நேரத்தில் ராஜீந்தர் குமார் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) ராஜீந்தர் குமாருக்காக கைது நடவடிக்கையை பதிவு செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது.
குற்றவியல் அலட்சியப் படுகொலை மற்றும் பொறுப்பற்ற முறையில் ஆபத்தை விளைவித்ததற்காக குமார் கைது செய்யப்பட்டு டெஷ்சூட்ஸ்(Deschutes) கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜீந்தர் குமார் நவம்பர் 28, 2022 அன்று அரிசோனாவின்(Arizona) லூக்வில்லி(Lukeville) அருகே சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





