நகங்களுக்குள் இருக்கும் 32 வகையான பாக்டீரியாக்கள்
அழகை கூட்டும் நகங்களுக்குள் ஆபத்தும் இருகிறது. அழகாக நகங்கள் வேண்டும் என நீளமாக வளர்த்தினால் ஆபத்தையும் சேர்ந்தே வளர்த்துகிறீர்கள் என்றே அர்த்தம். ஏனென்றால் நகங்களின் நீளம் அதிகரிக்க அதிகரிக்க அதில் சேரும் அழுக்குகளால் ஆபத்தும் கூடுகிறது.
நகங்களுக்குள் இருக்கும் ஆபத்தான பாக்டீரியா மற்றும் பூஞ்சை மறைந்துள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். நகங்களுக்கு அடியில் 32 வகையான பாக்டீரியாக்களும், 28 வகையான பூஞ்சைகளும் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நகங்களுக்குள் சேரும் அழுக்கு குறித்தும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் அமெரிக்காவில் 2021 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதனை அமெரிக்கன் பாடியாட்ரிக் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் கால் நகங்களுக்கு அடியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
அந்த முடிவுகள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தன. 50% மாதிரிகளில் பாக்டீரியா மட்டுமே கண்டறியப்பட்டது. 6.3% மாதிரிகளில் பூஞ்சை மட்டுமே கண்டறியப்பட்டது. 43.7% மாதிரிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை இரண்டின் கலவையும் கண்டறியப்பட்டது. இது கை நகங்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் நாள் முழுவதும் நம் கைகளை பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறோம், இதன் காரணமாக நகங்களுக்கு அடியில் கிருமிகள் எளிதில் குவிந்துவிடும்.
நகங்களுக்கு அடியில் காணப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதிப்பில்லாதவை என்று ஆராய்ச்சி காட்டுகிறது, ஆனால் அவை பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு அல்லது நகங்களில் காயங்கள் அல்லது தொற்று உள்ளவர்களுக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் நகங்களின் நிறமாற்றம், வீக்கம், வலி மற்றும் சீழ் ஆகியவை அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், நகங்களின் சரியான பராமரிப்பு மற்றும் தூய்மை மிகவும் முக்கியமானது.
நக பராமரிப்பு குறிப்புகள்
* ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது உங்கள் கைகளையும் நகங்களையும் சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.
* நகங்களுக்கு அடியில் படிந்திருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய மென்மையான பிரஷ் பயன்படுத்தவும்.
* நீளமான நகங்களை வைத்திருப்பதைத் தவிர்த்து, தொடர்ந்து நகங்களை வெட்ட வேண்டும்.
* நெயில் பாலிஷ் பூசுவதற்கு முன்பும் பின்பும் நகங்களை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
* நகங்களில் ஏதேனும் தொற்று அல்லது அசாதாரணம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.