இலங்கை செய்தி

முல்லைதீவில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 32 குடும்பங்கள் பாதுகாப்பாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாட்ட மக்கள் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.

அந்தவகையில் இன்றையதினம் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தில் உள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு கருவேலன்கண்டல் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை