கர்நாடக உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று காரணமாக 31 மான்கள் மரணம்
கர்நாடக(Karnataka) உயிரியல் பூங்காவில் பாக்டீரியா தொற்று காரணமாக 31 மான்கள் உயிரிழந்துள்ளதாக கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே தெரிவித்துள்ளார்.
மிருகக்காட்சிசாலையின் அறிக்கைபடி, நான்கே நாட்களில் 31 மான்கள் உயிரிழந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே(Eshwar Khandre), இறப்புகள் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தி, விலங்குகளிடையே நோயின் மூலத்தையும் பரவலையும் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நோய் மற்ற மிருகக்காட்சிசாலைகளுக்கு பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





