கிரேக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 300,000 மாணவர்கள்!
கிரேக்கத்தில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் அதிகாரப்பூர்வ மாணவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகால பட்டப்படிப்பிற்காக சேர்க்கப்பட்ட 308,605 மாணவர்களில் இருந்தே 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீக்கப்பட்டதாக கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பல தசாப்த கால நடைமுறையின் முடிவைக் குறிக்கிறது.
எந்தவொரு நவீன ஐரோப்பிய பல்கலைக்கழகத்திலும் மாணவர் அந்தஸ்து வாழ்க்கைக்கு செல்லுபடியாகாது” என்றும், திறன்கள் மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கும் மதிப்புள்ள பட்டங்களை நாங்கள் விரும்புகிறோம் என்றும் கல்வி அமைச்சர் சோபியா ஜகாரகி ( Sofia Zacharaki) தெரிவித்துள்ளார்.





