300 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செவ்வாய்க்கிழமை முதல் 300-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் 60% இண்டிகோவிடம் உள்ளது.
விமானச் சேவைத் தடங்கலுக்கு தொழில்நுட்பக் கோளாறுகள் (Technical Glitches), வானிலை மற்றும் புதிய பணியாளர் பணி ஒதுக்கீட்டு விதிகள் (New Crew Rostering Rules). ஆகியவையே முக்கிய காரணங்கள் என்று இண்டிகோ நிறுவனம்கூறியுள்ளது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, டெல்லியில் 33, மும்பையில் 85 மற்றும் பெங்களூரில் 73 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடங்கல்கள் குறித்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சீராக்கி (Aviation Regulator) விசாரித்து வருவதாகவும், ரத்து மற்றும் தாமதங்களுக்கான காரணத்தை விளக்கக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்த புதிய விமானப் பணிக் கால வரம்பு (FDTL – Flight Duty Time Limit) விதிகளால், விமானிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையை இண்டிகோ எதிர்கொள்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய விதிகள் விமான நேரத்தைக் கட்டுப்படுத்துவதுடன், அதிக ஓய்வை கட்டாயப்படுத்துகின்றன.
புதிய விதிகள் காரணமாகவே ரத்து செய்யப்படுகின்றன என்ற கூற்றை இந்திய விமானிகள் கூட்டமைப்பு (Federation of Indian Pilots) மறுத்துள்ளது. ஏனெனில், மற்ற விமான நிறுவனங்கள் இந்த விதிகளால் பாதிக்கப்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
நற்பெயர் பாதிப்பு
சரியான நேரத்துக்கு இயங்குவதில் நற்பெயர் பெற்ற இருபது ஆண்டுகள் பழமையான இந்த விமான நிறுவனத்தின் நற்பெயருக்கு இந்த நெருக்கடி பெரும் அடியாக விழுந்துள்ளது.
சமீபத்திய ஆய்வின்படி, இண்டிகோ பயணிகள் 54% பேர் கடந்த ஆண்டில் அதன் நேரந்தவறாமை குறித்துப் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.




