30 ஆண்டுகால அரசியல் பயணம் – கட்சித் தாவினார் சுயெல்லா பிரேவர்மேன்!
பிரித்தானியாவின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சியின் உள்துறை செயலாளராக பணியாற்றிய சுயெல்லா பிரேவர்மேன் ( Suella Braverman) தற்போது சீர்த்திருத்த யுகே (Reform UK) கட்சிக்கு மாறியுள்ளார்.
லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் 30 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பிரேவர்மேன், ஃபேர்ஹாம் (Fareham) மற்றும் வாட்டர்லூவில் (Waterlooville) தொகுதியை பிரிதிநிதித்துவப்படுத்தும் எம்.பியாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த அரசியல் மாற்றத்தை தொடர்ந்து நிகல் ஃபராஜின் ( Nigel Farage) கட்சியில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளது.
இது வர இருக்கும் பொதுத் தேர்தலில் சீர்த்திருத்த யுகே (Reform UK) கட்சிக்கு கிடைத்துள்ள புதிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது.





