செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 30 வயது நபர்

கலிபோர்னியாவில் 30 வயது இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது அறையில் தங்கியிருந்த நண்பர் ஒருவரை கத்தியால் குத்தியதாகக் கூறி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவின் மஹபூப்நகரைச் சேர்ந்த முகமது நிஜாமுதீன், செப்டம்பர் 3ம் திகதி சாண்டா கிளாராவில் உள்ள அவரது வீட்டிற்குள் கத்தியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முகமது நிஜாமுதீன் தனது அறைத் தோழரைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு பல காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்குள் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து 911 என்ற எண்ணுக்கு வந்த அழைப்பிற்கு பதிலளித்த போது குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

“தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்” என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு புளோரிடா கல்லூரியில் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வர உதவுமாறும் உயிரிழந்தவரின் தந்தை ஹஸ்னுதீன் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி