கனடாவில் 30 வயது இந்திய பெண் கொலை – காவல்துறை விடுத்துள்ள கோரிக்கை
கனடாவின்(Canada) டொராண்டோவில்(Toronto) இந்தியப் பெண் ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
30 வயது ஹிமான்ஷி குரானாவின்(Himanshi Khurana) கொலை குற்றச்சாட்டில் தேடப்படும் 32 வயது அப்துல் கஃபூரி(Abdul Ghafoori) என்ற சந்தேக நபரைக் கைது செய்ய கனடா சட்ட அமலாக்கப் பிரிவு நாடு தழுவிய பிடியாணையை பிறப்பித்துள்ளது.
ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan Avenue) மற்றும் வெலிங்டன் ஸ்ட்ரீட் வெஸ்ட்(Wellington Street West) அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் ஹிமான்ஷி குரானாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “சந்தேக நபரின் படத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம், இந்த நபர் எங்கே இருக்கிறார் என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து காவல்துறையை அழைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.





