இலங்கை

இலங்கையில் அரச குடியிருப்புகளை ஒப்படைக்காத 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஏறக்குறைய 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில முன்னாள் எம்.பி.க்கள் வீடுகளில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க விரும்புவதாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை காலி செய்யும்படி தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த வீடுகளை காலி செய்யாவிடின் அந்த வீடுகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மடிவெலயிலுள்ள வீட்டுத் தொகுதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!