கேனரி தீவில் பதிவான 30 நில நடுக்கங்கள் : வெடித்து சிதறிய எரிமலையால் பரபரப்பு!

கேனரி தீவுகளில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களில் சுமார் 30 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 1640 அடிக்கு கீழே நீருக்கடியில் காணப்படும் Enmedio எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
டெனெரிஃப் மற்றும் கிரான் கனாரியா இடையே கடலில் காணப்படும் இந்த எரிமலை செப்டம்பர் 12 முதல் 14 ஆம் திகதி வரை 30 முறை வெடித்துள்ளது. செப்டம்பர் 7 முதல் 12 ஆம் திகதிவரை 39 முறை வெடித்தது.
லா பால்மா தீவில் உள்ள கம்ப்ரே வியேஜா எரிமலை முகடுகளிலிருந்து எரிமலைக்குழம்புகள் வெளியேறி பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1,000க்கும் மேற்பட்ட வீடுகளும், 43 மைல் சாலையும் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 77 times, 1 visits today)