30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும்
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதியளவில் பாதிக்கப்படும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
உலகம் முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அதிக அளவில் கர்ப்பக புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக பரவிய பிறகு நோய் கண்டறிந்து சிகிச்சைக்காக வருபவர்களை அதிகமாக இருப்பதால்.
அவர்களை நோயிலிருந்து காப்பாற்றுவது அரிதாக உள்ளது. ஆகையால் இந்த வகை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்த தொண்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, தனியார் நிமிர்ந்துநில் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி சங்கம் சென்னை டவர்ஸ் சார்பில் மகளிர் நலம் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்தினர்.
இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல் பருமன் ரத்த அழுத்தம் ரத்தசோகை நீரிழிவு போன்ற தொற்றா நோய் மற்றும் அதிக அளவில் பாதிக்கப்படும் கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து கொள்ள இலவசமாக மகளிர் நலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் மனோகரன், முத்து முருகன், பிரியா மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முகாமில் பயன்பெற்றனர்.
இந்த முகாமினை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் துவக்கி வைத்து முகாமில் கலந்து கொள்ளும் வந்த பெண்களுக்கு அறிவுரையை வழங்கினர்.