துருக்கியில் நடந்த மோதலில் 3 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 6 பயங்கரவாதிகள் மரணம்
வடமேற்கு துருக்கியில்(Turkey) டேஷ்(Daesh) போராளிகள் காவல்துறையினருடன் மோதியதில் மூன்று அதிகாரிகள் மற்றும் ஆறு போராளிகள் உயிரிழந்ததாக துர்க்கிஉள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்தான்புல்லின்(Istanbul) தெற்கே உள்ள யலோவா(Yalova) மாகாணத்தில் உள்ள எல்மாலி(Elmali) மாவட்டத்தில், போராளிகள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டபோது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 15 மாகாணங்களில் டேஷ் சந்தேக நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சோதனைகளில் யாலோவாவில் நடந்த நடவடிக்கையும் ஒன்று என்று உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா(Ali Yerlikaya) குறிப்பிட்டுள்ளார்.





