பிரித்தானியாவில் சிக்கிய இலங்கை தமிழர் உள்ளிட்ட 3 பேர் – அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்
பிரித்தானியாவில் புகலிடம் கோருவோரிடம் ஆயிரக்கணக்கான பவுண்ட்களை பெற்று போலி ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டில் சட்ட ஆலோசனை வழங்கிய மூன்று நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரித்தானிய வழக்கறிஞர்களின் கண்காணிப்பு குழுவினால் இது தொடர்பிலான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல ஊடாக Dailymail நடத்திய மறைமுக சோதனையின் போது குறித்த 3 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த 3 நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களுக்குள் போலி சட்ட ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவரும் சிக்கியிருந்தார்.
பிரித்தானியாவில் போலியாக அகதி தஞ்சம் கோருவதற்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கு 10,000 பவுண்டுகள் வரை அறவிட்ட லிங்கஜோதி என்ற தமிழ் வழங்கறிஞரே இந்த குற்றச்சாட்டில் சிக்கியிருந்தார்.
சட்ட ஆலோசகர் என்ற பெயரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களிடம், சித்திரவதை, மரண அச்சுறுத்தல்கள் மற்றும் நவீன அடிமைத்தனம் உள்ளிட்ட போலி கதைகளை கூறுமாறு ஆலோசனை வழங்கி, அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க உதவுவதாகக் கூறியதைத் தொடர்ந்து, சட்ட ஆலோசகர் ஒருவரின் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் ஒழுங்குமுறை ஆணையக் குழுவின் தலைவர் Anna Bradley, Dailymail பத்திரிகை மூலம் அடையாளம் காணப்பட்ட வழக்குரைஞர்களின் நடத்தையால் தான் அதிர்ச்சியடைந்ததாக’ கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் மூன்று நிறுவனங்களில் பணி புரியும் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்வது மற்றும் இந்த நிறுவனங்களை மூடுவது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.