திரிபுராவில் ரயிலுடன் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
திரிபுராவின்(Tripura) தலாய்(Dalai) மாவட்டத்தில் வேன் வேகமாக வந்த ரயிலுடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, மூன்று பேர் பயணித்த வாகனம் ரயிலில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், “அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணை நடந்து வருகிறது” என்று காவல்துறை அதிகாரி சித்த தேபர்மா(Siddha Debarma) குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)





