ஆசியா செய்தி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கம் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவில் தென்மேற்கே தர்ரா ஆதம் கேல் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், திடீரென நேற்று அதில் விபத்து ஏற்பட்டது.

சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அவசரகால பொறுப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர்.

சுரங்கத்தில் இருந்து 3 பேரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த 4 பேரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஷாங்லா மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரி அலி அமீன் கந்தாப்பூர் இரங்கல்களை தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொண்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!