மெக்சிகோவில் காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பில் 3 பேர் மரணம்
மெக்சிகோவின்(Mexico) மேற்கு மாநிலமான மிக்கோவாகனில்(Michoacan) உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கார் வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் மற்றும் மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பு கோஹுயானாவில்(Cohuayana) உள்ள ஒரு சாலையில் நடந்ததாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் இரண்டு பேர் பிராந்திய மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்” என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் உயிரிழந்த இரண்டு பேரும் சமூக காவல்துறை அதிகாரிகள் என்று கோஹுயானா சமூக காவல்துறையின் தலைவர் ஹெக்டர் செபெடா(Hector Zebeda) குறிப்பிட்டுள்ளார்.





