கனேடிய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 இந்திய வம்சாவளி ஆண்கள்
2022ம் ஆண்டு கனடாவின்(Canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில்(British Columbia) ஒரு வயதான தம்பதியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய வம்சாவளி ஆண்கள் மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அர்னால்ட்(Arnold) மற்றும் ஜோன் டி ஜாங்(Joan de Jong) தம்பதியினர் மே 9, 2022 அன்று அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குர்கரன் சிங்(Gurkaran Singh), அபிஜீத் சிங்(Abhijeet Singh) மற்றும் குஷ்வீர் சிங் டூர்(Khushveer Singh Toor) என அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், அபோட்ஸ்ஃபோர்டில்(Abbotsford) உள்ள நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்பு ஒரு துப்புரவு நிறுவனம் மூலம் அர்னால்ட் மற்றும் ஜோன் டி ஜாங்கிற்கு வேலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆர்னால்டும் ஜோவானும் அவர்களது வீட்டின் தனித்தனி படுக்கையறைகளில் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இறந்து கிடந்ததாக சிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஆர்னால்ட் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார் என்றும் ஜோவானே பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





