முன்னாள் ஜனாதிபதியின் மறைவையொட்டி பெருவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரியின் மறைவையடுத்து, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
“குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரியின் மரணம் காரணமாக , சட்டமன்ற அரண்மனையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் உயர்த்தப்பட்டது” என்று நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழ் தெரிவித்துள்ளது.
புஜிமோரியின் உடல் சனிக்கிழமை வரை லிமாவில் உள்ள கலாச்சார அமைச்சகத்தில் வைக்கப்படும், பிறகு அவரின் உடல் தலைநகருக்கு தெற்கே உள்ள கல்லறைக்கு கொண்டுசெல்லப்படும்.
முன்னாள் ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்துவதற்காக கலாச்சார அமைச்சகத்திற்கு வெளியே மக்கள் திரண்டனர்.





