3 நாள் போர் நிறுத்தம், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு: மத்தியஸதம் வகிக்கும் கத்தார்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் 3 நாள் போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று நிலையில், 70 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் காசாவில் 5 நாள் எத்தகைய தாக்குதலும் இல்லாத போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவுக்குமானால் பெண்கள் குழந்தைகள் உட்பட 70 பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக கத்தார் மத்தியஸ்தர்கள் ஹமாஸ் அமைப்பினர் தங்களது நிபந்தனைகளை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் பணயக் கைதிகளை விடுவிப்பது மற்றும் 3 நாள் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
3 நாள் போர் நிறுத்தத்திற்கு மாற்றாக 50 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.