இலங்கையில் ஒரே நேரத்தில் அச்சுறுத்தும் 3 ஆபத்துக்கள்!
இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார திணைக்களம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,
“.. இம்மூன்று நோய்களையும் கட்டுப்படுத்த தனிமனித சுத்தம் மிகவும் அவசியமானது.மேலும், தற்போதைய வெள்ள நிலைமை தணிந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த அனர்த்தத்தை தடுக்க பொதுமக்களின் பூரண ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்றேல், எதிர்காலத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம்…”