ஆசியா

மியன்மாரில் அடுத்தடுத்து உணரப்பட்ட 3 நிலநடுக்கங்கள்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன.

இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ஆகும்.

அதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது அதிகாலை 2.53 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான அந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.

அதற்கு முன்பு முதல் நிலநடுக்கம் நேற்றிரவு 11.56 மணியளவில் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. அந்நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content