கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 3 குழந்தைகள் மரணம்
கர்நாடகாவின் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள அச்சேபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் மூழ்கி மூன்று குழந்தைகள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகள் 14 வயது விஷ்ணு, 12 வயது நிஹால் ராஜ் மற்றும் 16 வயது ஹர்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தசரா விடுமுறையின் போது, சிறுவர்கள் அருகிலுள்ள ஏரியில் நீந்தச் சென்றிருந்த போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது
சம்பவம் குறித்து அறிந்ததும், பாகேபள்ளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளூர்வாசிகளின் உதவியுடன் உடல்களை மீட்டனர்.
(Visited 4 times, 1 visits today)




