வங்கதேசத்தில் கோகோன் தாஸ் கொலை வழக்கில் 3 பேர் கைது
வங்கதேசத்தில்(Bangladesh) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து நபர் டாக்காவில்(Dhaka) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
நான்கு நாட்களுக்கு முன்பு 50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பினார்.
தாக்குதலுக்கு பிறகு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோகோன் தாஸ் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் மூன்று முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தலைமை ஆலோசகரின் செய்தித் தொடர்பாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
கிஷோர்கஞ்சின்(Kishorganj) பஜித்பூர்(Bajitpur) பகுதியில் இருந்து சோஹாக்(Sohak), ரப்பி(Rabbi) மற்றும் பலாஷ்(Palash) ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் உள்ளூரில் குண்டர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
வங்கதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்து நபர் சிகிச்சை பலனின்றி மரணம்





