பின்லாந்தில் நடை பாலம் இடிந்து விழுந்ததில் 27 பேர் காயம்!
பின்லாந்தில் நடைபாலம் ஒன்று இடிந்ததால் சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் ஹெல்சிங்கிக்கு அருகிலுள்ள எஸ்பூ நகரில் இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என உள்ளூர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நிர்மாணப் பகுதியொன்றில் அமைக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக நடைபாலம் ஈடிந்ததால்இ அதில் நடந்து கொண்டிருந்த மக்கள் பல மீற்றர் பள்ள்திலுள்ள வீதியில் வீழ்ந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





