இலங்கையில் புதிதாக 264 தொழு நோயாளிகள் பதிவு
இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரம் கூறுகிறது.
அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.
“2023 ஆம் ஆண்டில், 1,580 தொழுநோயாளிகளைப் பதிவு செய்துள்ளோம். இவற்றில் பெரும்பாலானவை புதிதாக அடையாளம் காணப்பட்டவை. அதாவது 1,520 புதிய நோயாளிகள்.
மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட 1,580 பேரில் 180 சிறுவர், சிறுமிகள் உள்ளனர். அதாவது 12% குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்கள். 2024 முதல் காலாண்டில், 274 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள் 264 பேர்.
274 இல் 21 பேர், அதாவது 8% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். நோயைப் பரப்பும் திறன் அவர்களிடம் இல்லை. இந்த ஆண்டும், 8% மாற்றுத்திறனாளி நோயாளிகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.” என்றார்.