இலங்கை

26 பாலங்கள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் – சிறிபால கம்லத்!

நாடு முழுவதிலும் 26 பாரிய பாலங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக   நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த பாலங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த பாலங்கள் ஆபத்தான நிலையில், இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னம்பிட்டிய பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொத்தலிய பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது.

இதேவேளை பேருந்து விபத்திற்கு சாரதியின் தவறே காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், நாற்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!