2025ம் ஆண்டில் உக்ரைனில் 2,514 பொதுமக்கள் உயிரிழப்பு – ஐ.நா அறிக்கை
2022ம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைனில்(Ukraine) பொதுமக்களுக்கு கடந்த ஆண்டு மிகவும் ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது.
ஏனெனில், போர் மற்றும் ரஷ்யாவின்(Russia) நீண்ட தூர ஆயுதப் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்ததாக உக்ரைனில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்(United Nations Human Rights) குழு தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், “2025ம் ஆண்டில் உக்ரைனில் குறைந்தது 2,514 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 12,142 பேர் காயமடைந்துள்ளனர்” என்று ஐ.நா கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது 2024 உடன் ஒப்பிடும் போது 31 சதவீதம் அதிகரிப்பு என்றும் 2023 உடன் ஒப்பிடும் போது 70 சதவீதம் அதிகரிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் பெரும்பாலானவை உக்ரைனின் அரச கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் ரஷ்ய ஆயுத படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களிலிருந்து நிகழ்ந்ததாக கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு முன்னணிப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன, காரணம் வயதானவர்கள் தங்கள் கிராமங்களிலேயே இருந்ததால் பாதிக்கப்பட்டனர்.





