டச்சு அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான தங்க தலைக்கவசம் திருட்டு
நெதர்லாந்தில் உள்ள டிரெண்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து 2,500 ஆண்டுகள் பழமையான தங்க தலைக்கவசம் உட்பட ருமேனிய கலைப்பொருட்கள் திருடப்பட்டதாக அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த கெட்டோ-டேசியன் கலைப்பொருட்கள்,ருமேனிய அருங்காட்சியகங்களிலிருந்து பெறப்பட்ட பொருட்களுடன் கடனாகப் பெறப்பட்டன.
“அசென்னில் உள்ள டிரெண்ட்ஸ் அருங்காட்சியகம் மற்றும் புக்கரெஸ்டில் உள்ள ருமேனியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்திற்கு இது ஒரு இருண்ட நாள்” என்று டிரெண்ட்ஸ் பொது இயக்குநர் ஹாரி டூபன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வெடிபொருட்களைப் பயன்படுத்தி கதவைத் திறந்த பிறகு பலர் கொள்ளையடித்ததாக உள்ளூர் போலீசார் நம்புவதாகவும், விசாரணையில் இன்டர்போலையும் அதிகாரிகள் ஈடுபடுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.