மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் உள்பட 250 பேர் மீட்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/mi.jpg)
மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட குழு பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மரின் கரேன் பகுதியில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குழுவினர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)