அமெரிக்காவில் விபத்தினால் தப்பி சென்ற 250 மில்லியன் தேனீக்கள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவில் கனரக வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதால் 250 மில்லியன் தேனீக்கள் தப்பி சென்றுள்ளது.
தேனீக்கள் குறித்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியளவிலான தேனீக்கள் பறந்து வந்தால் அவற்றைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வொஷிங்டன் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் விபத்து நேர்ந்தது. தேன் கூடுகளைக் கொண்டு சென்ற கனரக வாகனம் விபத்தில் கவிழ்ந்தது. அதனால் 250 மில்லியன் தேனீக்கள் வெளியே பறந்தன.
கொள்கலன் லொரியில் 31,750 டன் தேனீக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் இருக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. விபத்தினால் ஏற்பட்ட சேதங்களைத் தேனீ நிபுணர்கள் சுத்தம் செய்ய உதவுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கும் எல்லைக்கு அருகே அந்தச் சாலைகள் அமைந்துள்ளன.





