தென் கடலில் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் – அறுவர் கைது
கடற்படையினரால் சுமார் 250 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
தென் கடலில் IMULA – A- 1108GLE என்ற இலக்கத்தைக் கொண்ட பிரியங்கா – 6 பலநாள் மீனவப் படகு மூலம் இந்த போதைப்பொருள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
படகிலிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.





