தெலுங்கானாவில் எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்
தெலுங்கானாவின் சங்காரெட்டி(Sangareddy) மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயம்(myrmecophobia) காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2022ம் ஆண்டு திருமணமாகி மூன்று வயது மகளின் தாயான அந்தப் பெண், புடவையுடன் மின்விசிறியில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் சிறுவயதிலிருந்தே எறும்புகளுக்கு பயந்து வந்ததாகவும், ஏற்கனவே தனது சொந்த ஊரான மஞ்சேரியலில்(Manjeri) உள்ள ஒரு மருத்துவமனையில் ஆலோசனை பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், “ஸ்ரீ, மன்னிக்கவும், இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. மகளை கவனித்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)





