இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மும்பையில் 25 வயது பெண் ஏர் இந்தியா விமானி தற்கொலை

ஏர் இந்தியாவில் பணியாற்றிய பெண் விமானி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட 25 வயது ஸ்ருஷ்டி துலி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.

ஏர் இந்தியாவில், விமானியாக பணியை துவங்கி மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஸ்ருஷ்டி வசித்து வந்தார்.

டில்லியில் பயிற்சிக்காக சென்ற போது, ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

கடந்த 25ம் தேதி வரை இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அன்றைய தினம் காரில், ஆதித்யா டில்லி சென்றுள்ளார். அப்போது அவரை மொபைல்போனில் அழைத்த ஸ்ருஷ்டி, தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ஆதித்யா வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் ஒருவர் உதவியுடன், கதவை திறந்து சென்ற போது ஸ்ருஷ்டி,தூக்கு போட்டுக் கொண்டது தெரிந்தது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ருஷ்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஸ்ருஷ்டியின் உறவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் ஆதித்யா பண்டிட், ஸ்ருஷ்டியை மோசமாக நடத்தி துன்புறுத்தியதுடன் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஆதித்யா பண்டிட்டை போலீசார் கைது செய்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!