இந்தியா செய்தி

தீக்கிரையான 25 பேர் வானவேடிக்கையால் தீ பரவியதா?

இந்தியாவின், வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதி ஊழியர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆறு பேர் காயமடைந்ததாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார். தீ விபத்து முதன்மையாக சமையல் அறை பகுதியில் ஏற்பட்டதாகவும், அங்கே ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு தீ பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டது. எவ்வாறெனினும், இரவு விடுதியில் நிகழ்ச்சி இடம்பெறும்போது இடம்பெற்ற வானவேடிக்கையில் கிளம்பிய தீ கூரை தீப்பற்ற காரணமாக அமைந்ததாக சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு கருத்துகள் வெளியாகி வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளிலும், சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த துயரச் சம்பவம் கோவா சுற்றுலா பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.  

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!