காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 25 பாலஸ்தீனியர்கள் மரணம்
காசா(Gaza) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 25 பாலஸ்தீனியர்கள்(Palestinians) கொல்லப்பட்டதாக ஹமாஸ்(Hamas) நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசா நகரத்தின் கிழக்கு ஜெய்டவுன்(Zeitoun) பகுதியில் உள்ள மத அறக்கட்டளை அமைச்சக கட்டிடம் தாக்கப்பட்டதில் இரண்டு பெண்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகால பேரழிவு தரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்(Donald Trump) காசா அமைதித் திட்டத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.





