மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இதேநாளில் (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்.உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது
இந்நிகழ்வுகள் இன்று தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்றைய நாளில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தன் 24வது ஆண்டு வலிதீரா நினைவு மந்துவில்லில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப்பட்டது
தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன் சமூக செயற்பாட்டாளர் த.லோகேஸ்வரன் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.