நீதிமன்ற உத்தரவின் பேரில் 2,447 தரமற்ற டின் மீன்கள் அழிப்பு
மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக கண்டறியப்பட்ட 2,447 டின் மீன்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (16) அழிக்கப்பட்டன.
டிசம்பர் 5, 2025 அன்று கொஸ்கம பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நடத்திய சிறப்பு சோதனையின் போது, தரமற்ற டின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பான வழக்கு இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட தொழிலதிபருக்கு 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட டின் மீன்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நீதிமன்ற மேற்பார்வையில் அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் டின் மீன்கள் அழிக்கப்பட்டன.
இந்த டின் மீன்கள் முறையான லேபிள்கள், முத்திரைகள் இன்றி சேமிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை தரநிலைகள் (SLS) சான்றிதழ் இல்லாமையும் விசாரணையில் தெரியவந்தது.





