பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவில் ஊழல் -மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தல்
பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவில் ஊழல் -மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தல்
பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவு தொடர்பான ஊழலுக்குப் பின்னர், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேலை மற்றும் ஓய்வூதியத் துறையில் (DWP) முழுமையான மறுசீரமைப்பு தேவை என அரச ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் லிஸ் சேஸ் (Liz Sayce), , துறையின் நிர்வாகம் மற்றும் பணியாளர் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
துறையின் தவறுகள் காரணமாக, நூற்றுக்கணக்கான பராமரிப்பாளர்கள் தங்களுக்கு அறியாமலேயே பெரும் கடன் சுமைகளை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அதிகமாக பணம் பெற்றதாக கூறி பராமரிப்பாளர்களையே குற்றம் சுமத்தியைத் கண்டு தாம் மிகவும் வருத்தமடைந்ததாக லிஸ் சேஸ் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்தும், அவற்றை சரிசெய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.





