ஐரோப்பா

பிரான்ஸில் 243 பாடசாலைகள் – கல்வி நிலையங்கள் எரிப்பு – வருத்தத்தில் கல்வி அமைச்சர்

பிரான்ஸில் 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒரு வாரமாக இடம்பெற்ற வன்முறையினால் இதுவரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாஹெல் என்ற இளைஞன் பொலிஸாரால் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறை பதிவாகி வருகிறது.

இதில் பேருந்துகள், ட்ராம் ரயில்கள் எரிக்கப்படுவதுடன், நகரசபைக் கட்டிடம் மற்றும் கல்வி நிலையங்கள், பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகளும் எரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏழு நாட்களில் இதுவரை 243 நிலையங்கள் அவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 60 பாடசாலைகள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் Pap Ndiaye தெரிவித்தார்.

பாடசாலைகளை தாக்குவது, எங்களுடைய வாழ்வின் அடையாளங்களை தாக்குவது போன்றது என அமைச்சர் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!