உத்தரபிரதேசத்தில் பேஸ்புக் நேரலையில் 24 வயது பெண் தற்கொலை
உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) விபூதி காண்ட்(Vibhuti Khand) பகுதியில், பேஸ்புக் நேரலையில் 24 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு முன்னதாக அம்பேத்கர் நகரில்(Ambedkar Nagar) உள்ள உள்ளூர் நிருபர் மீது புகார் அளித்திருந்ததாகவும் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக ராணுவ வீரர் ஒருவர் மீதும் அவர் புகார் அளித்திருந்ததாகவும் காவல்துறை அதிகாரி அமர் சிங்(Amar Singh) குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்தப் பெண் அதிகாலை 5.30 மணியளவில் பேஸ்புக் நேரலையில் பங்கேற்றுள்ளார். பின்னர் மெட்டா(Meta) நிறுவனம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து அறையின் கதவை உடைக்க தாமதம் ஆகியதாகவும் இல்லையெனில் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அமர் சிங் குறிப்பிட்டுள்ளார்.





