நியூயார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 வயது இந்திய மாணவி மரணம்
அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படித்து வந்த 24 வயது சஹஜா ரெட்டி உடுமலா(Sahaja Reddy Udumala) என்ற இந்திய மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக நியூயார்க்கில்(New York) உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அல்பானியில்(Albany) வீடு தீ விபத்தில் உயிரிழந்த உடுமலா அவர்களின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் Xல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், உடுமலா அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் தெலுங்கானா(Telangana) மாநிலம் ஐதராபாத்(Hyderabad) அருகே ஜோடிமெட்லா(Jodimetla) பகுதியைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





