குவாண்டாஸ் விமானத்தில் உயிரிழந்த 24 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் குடும்பத்தைப் பார்க்கச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், ஆஸ்திரேலியாவில் புறப்படுவதற்கு சற்று முன்பு குவாண்டாஸ் விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூன் 20 அன்று 24 வயதான மன்பிரீத் கவுர் மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு பறக்க தயாராக விமானத்தில் ஏறியபோது இந்த சம்பவம் நடந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
துல்லாமரைன் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறிய உடனேயே திருமதி கவுருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
ஒரு நண்பரின் கூற்றுப்படி, 24 வயதான மாணவர் விமான நிலையத்திற்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு “உடல்நிலை சரியில்லை” என்று கூறப்படுகிறது, ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானத்தில் ஏற முடிந்தது. ஆனால் சீட் பெல்ட் போட சென்றபோது, கவுர் தரையில் விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
”விமானத்தில் ஏறியபோது சீட்பெல்ட் போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் விமானம் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவள் இருக்கைக்கு முன்னால் விழுந்து அந்த இடத்திலேயே இறந்தாள், ”என்று அவரது நண்பர் குர்திப் கிரேவால் ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
குவாண்டாஸ் செய்தித் தொடர்பாளர், விமானக் குழுவினர் மற்றும் அவசர சேவைகள் மருத்துவ உதவியை வழங்க முயற்சித்துள்ளன. அவள் காசநோயால் இறந்திருக்கலாம் என்பது புரிகிறது என தெரிவித்தார்.