24 வார சம்பளம் போனஸ்; மகிழ்ச்சியில் உச்சத்தில் எமிரேட்ஸ் ஊழியர்கள்
கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த நிதியாண்டில் நான்கரை கோடி பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்நிறுவனம் 29 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.
எனவே வரலாறு காணாத உச்சத்தை கொண்டாடும் விதமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஐந்தரை மாத சம்பளத்தை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் போனஸாக வழங்க உள்ளமை ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





