மும்பையில் 23 வயது தொலைக்காட்சி நடிகர் அமன் ஜெய்ஸ்வால் மரணம்

மும்பையில் உள்ள ஜோகேஸ்வரி சாலையில் ஒரு லாரி மோதியதில் 23 வயது தொலைக்காட்சி நடிகர் அமன் ஜெய்ஸ்வால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
“தார்திபுத்ர நந்தினி” என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்ததற்காக அறியப்பட்டவர் அமன் ஜெய்ஸ்வால்.
காமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெய்ஸ்வால், காயங்களால் இறந்தார் என்று அம்போலி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாரி ஓட்டுநர் மீது வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 20 times, 1 visits today)