பிரேசிலில் 23 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் கைது
பிரேசிலில் சமூக ஊடக பிரபலமான 23 வயதான மெலிசா சைட் (Melissa Said), பஹியாவிற்கும் (Bahia) சாவ் பாலோவிற்கும் (São Paulo) இடையில் செயல்படும் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வலையமைப்பின் தலைவராக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 351,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட மெலிசா சைட், பல நாள் தீவிர கண்காணிப்பைத் தொடர்ந்து பஹியாவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். மேலும், 1.4 கிலோகிராம் கஞ்சா, 270 கிராம் ஹாஷிஷ், டிஜிட்டல் தராசுகள், பொதியிடல் பொருட்கள், தொலைபேசிகள், வங்கி அட்டைகள் மற்றும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
(Visited 4 times, 4 visits today)




