பொரளை துப்பாக்கிச் சூடு தொடர்பாக 23 வயது இளைஞன் கைது

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
பொரளை, சஹஸ்புர விளையாட்டு மைதானத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குழு மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் ஒருவர் மரணமடைந்தார்.
இதை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது
(Visited 1 times, 1 visits today)